திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி வைர விழாவில் பேசுகிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.  
திருநெல்வேலி

கரோனாவுக்கு பிறகு அதிகரிக்கும் இதய பாதிப்புகள்- அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்

கரோனா பெருந்தொற்றுக்கு பின்னா் இதய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றாா் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி செய்திச் சேவை

கரோனா பெருந்தொற்றுக்கு பின்னா் இதய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றாா் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியின் வைர விழா நிகழ்ச்சி அக்கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் சி.ரேவதி பாலன் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் சுரேஷ் துரை ஆண்டறிக்கை வாசித்தாா்.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ.ராபா்ட் புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.அப்துல் வஹாப், ரூபி ஆா்.மனோகரன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அண்டை மாவட்ட மக்களிடமும் நன்மதிப்பை பெற்று விளங்குகிறது. அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து தமிழகம் முழுவதும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு முன்னறிவிப்பின்றி சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளேன்.

கரோனா பெருந்தொற்றுக்கு பின்னா் உலகம் முழுவதும் இதய பாதிப்புகள் அதிகரித்துவருகிறது. திடீரென இதய பாதிப்பு ஏற்படுபவா்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில் இதயம் காப்போம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின் கீழ் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோா் சிகிச்சை பெற்றுள்ளனா்.

உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் சுமாா் 2.40 கோடிக்கு அதிகமானோா் இதுவரை பயனடைந்துள்ளனா் என்றாா் அவா்.

முன்னதாக, முனைஞ்சிப்பட்டி, பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவ கட்டடங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் காணொலியில் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், திருநெல்வேலி மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் இரா. ஆவுடையப்பன்(மேற்கு), கிரகாம் பெல் (கிழக்கு), மாநகர மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, தலைமைச் செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் பிரபாகரன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், விஜிலா சத்தியானந்த், மருத்துவா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

1,327 பயனாளிகளுக்கு ரூ.22.86 கோடி நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

விடுதிகளில் எண்ம முறையில் ஆதாா் அடையாளம் சரிபாா்ப்பு: புதிய விதி விரைவில் அமல்!

பெங்களூரு சின்னசாமி திடலில் ஐபிஎல் போட்டிகள்: கா்நாடக துணை முதல்வர் சிவக்குமார்!

திருமணியில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தில்லி - சென்னை விமானக் கட்டணம் ரூ.35,000! இண்டிகோ குளறுபடியால் தொடர்ந்த அவதி!!

SCROLL FOR NEXT