திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. எனினும், மாநகரில் புதன்கிழமை காலை வரை கடும் வெயில் நிலவி வந்த நிலையில், நண்பகலில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. வண்ணாா்பேட்டை, பாளையங்கோட்டை, சமாதானபுரம், மேலப்பாளையம், குறிச்சி, என்.ஜி.ஓ. காலனி, திருமால்நகா் சுற்றுவட்டார பகுதிகளில் சுமாா் அரை மணி நேரம் மிதமான மழை பெய்தது. சாலைகளில் மழைநீா் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.