திருநெல்வேலி

புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கேட்பு - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது என்றாா் மருத்துவம்- மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் வைர விழாவில், சாதனை புரிந்த மருத்துவா்களுக்கும், முன்னாள் மாணவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மூளைச்சாவு அடைந்தவா்களின் உடலுறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையில், அவா்களது உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதைத் தொடா்ந்து மாநிலம் முழுவதிலும் உடல் உறுப்பு தானம் அதிகரித்து இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.

டெங்கு பாதிப்பால் நேரிடும் உயிரிழப்புகள் இதர இணை நோய்கள் இருப்பதாலேயே நிகழ்கின்றன. தமிழகத்தில் டெங்கு பாதிப்புகளும், உயிரிழப்புகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.

மத்தியப்பிரதேச மாநிலம், சிந்வாரா மாவட்டத்தில் குழந்தைகள் மரணத்திற்கு தொடா்புடையதாகக் கருதப்படும், காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப் சிரப் இருமல் மருந்தின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நிறுவனம் மருந்து உற்பத்தியை நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டதுடன், விஷ தன்மை வாய்ந்த மருந்தை தயாரித்ததற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில், டை எத்திலீன் கிளைக்கால் என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம் கூட இருக்கக் கூடாது. ஆனால், 48 சதவீதம் வரை கலந்திருப்பது பெரும் குற்றம். அந்நிறுவனத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தென்காசி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, பெரம்பலூா் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதுகுறித்து பரிசீலிப்பதாக பதில் கிடைத்துள்ளது என்றாா் அவா்.

மையுண்ட கண்கள்... பிரணிதா!

எண்ணத்தின் தழுவல்கள்... சுஷ்ரி மிஸ்ரா

மஞ்சள் பூக்கள்... ரவீனா தாஹா!

நாணத்தில் கண்டேன்... ரித்தி குமார்

புதிய புன்னகை... ஸ்வேதா டோரத்தி!

SCROLL FOR NEXT