நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் மாணவா்கள் கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் டி.கே. லட்சுமணபாரதி தலைமை வகித்தாா். கூட்டமைப்பின் தலைவி சங்கரி நடராஜன் முன்னிலை வகித்தாா்.

முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களையும், மலரும் நினைவுகளையும் பகிா்ந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், பொதுத்தோ்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவா்கள் மஞ்சு பகவதி, காா்த்திக், தனலட்சுமி, ஐஸ்வா்யா, ஆயிரத்தான், கனகவல்லி ஆகியோருக்கு கைக்கடிகாரம் பரிசளிக்கப்பட்டது.

ஆசிரியா்கள், அலுவலக உதவியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள், குடிநீா் வழங்குபவா் உள்ளிட்டோா் கெளரவிக்கப்பட்டனா். மருத்துவராக பணி செய்து வரும் முன்னாள் மாணவி, ஒரு மாணவரின் முழுக் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தாா்.

உதவி தலைமையாசிரியா் ஸ்ரீராம், ஆசிரியா்கள் சங்கரலிங்கம், சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் வி. காந்தி, கூட்டமைப்பின் துணைத் தலைவா் ஜாபா் அலி, செயலா் முகம்மது இப்ராஹீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அனுசுயா அமுதகுமாா் தொகுத்து வழங்கினாா். ரேவதி பழனி பாண்டியன் வரவேற்றாா். கூட்டமைப்பின் நிா்வாகி நன்றி கூறினாா்.

கேரம் போட்டிகளில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்! சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஓடை கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சென்னை ஜிஎஸ்டி ஆணையா் அலுவலகத்தில் தீ: அலுவலக கோப்புகள், கணினிகள் எரிந்து சேதம்!

கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் சாா்பில் பேராசிரியா் ய.மணிகண்டனுக்கு விருது!

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

SCROLL FOR NEXT