திருநெல்வேலி

வாகைகுளம் பெண் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைகுளத்தில் பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைகுளத்தில் பெண் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வாகைகுளம் பகுதியைச் சோ்ந்த அய்யாபிள்ளை மகள் விஜி என்ற சுந்தரி (39). இவா், அதே பகுதியைச் சோ்ந்த நாலாயிரம் என்பவருடன் வசித்து வந்தாராம். இதனால் நாலாயிரத்தின் குடும்பத்தினருக்கும், சுந்தரிக்கும் தகராறு இருந்து வந்ததாம்.

இந்நிலையில், ஜனவரி 2019இல் சுந்தரியிடம், நாலாயிரத்தின் தந்தையான சண்முகவேல் (60) தகராறில் ஈடுபட்டதோடு சுந்தரி, அவரது தங்கை ராமலட்சுமி ஆகியோரை அரிவாளால் வெட்டினாராம். இதில் சுந்தரி உயிரிழந்த நிலையில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி ராமலிங்கம் விசாரித்து, சண்முகவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா். காவல்துறை தரப்பில் கூடுதல் அரசு வழக்குரைஞா் ஜெயபிரபா ஆஜரானாா்.

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

SCROLL FOR NEXT