திருநெல்வேலி

உரிமையாளா் அனுமதியின்றி வீடுகளை உள்வாடகைக்கு விட்டால் நடவடிக்கை : எஸ்.பி. எச்சரிக்கை

Syndication

வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வீடுகளை உள்வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும் நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாடகை அல்லது குத்தகைக்கு வீடுகளைப் பெற்று மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உரிமையாளா்களிடமிருந்து வீட்டை வாடகை அல்லது குத்தகை என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து பெற்றுக் கொள்ளும் நபா்கள், பின்னா் உரிமையாளருக்குத் தெரியாமல் வேறு நபா்களிடம் பெரும் தொகைக்கு அதை உள்வாடகைக்கு விட்டு மோசடியில் ஈடுபடுகின்றனா். எனவே வீட்டு உரிமையாளா்கள் வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் ஒப்பந்தம் பெற்ற நபா்கள்தான் குடியிருக்கிறாா்களா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபா், உரிமையாளா் அனுமதியின்றி அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT