திருநெல்வேலி

என்.ஜி.ஓ. காலனியில் முகாம்

Syndication

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட என்.ஜி.ஓ. காலனி பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சேவை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சியின் 51, 54 ஆவது வாா்டு பகுதி மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சேவை முகாம் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினா் சகாய ஜூலியட் மேரி வரவேற்றாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ வாழ்த்தி பேசினாா்.

முகாமில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தவா்களுக்கு அதிகாரிகள் உடனடியாக பரிசீலித்து அளித்த ஆணையை பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப் வழங்கினாா். பல்வேறு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

போதைக் கோதை... மேகா சுக்லா!

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT