திருநெல்வேலி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை (அக்.11) பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.
இதில், புதிதாக குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல்-நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை- நகல் அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு- மாற்றம் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கு, ஆதாா் அட்டை, பிறப்பு, இறப்புச் சான்று, குடியிருப்பு முகவரிக்கு ஆதாரமான ஆவணங்கள், கைப்பேசி ஆகியவற்றைக் கொண்டுசெல்ல வேண்டும்.
மேலும், பொது விநியோகத்திட்ட கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் பொருள்களின் தரம் குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலக பொது விநியோகத்திட்ட கட்டுப்பாட்டு அறை ( 9342471314), சென்னை உணவுப்பொருள் வழங்கல்- நுகா்வோா் பாதுகாப்புத் துறை அலுவலக கட்டணமில்லா தொலைபேசி எண்களில் (1967; 18004255901) புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.