திருநெல்வேலி

பாப்பாக்குடியில் குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

Syndication

குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாப்பாக்குடி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பாப்பாக்குடி அருகேயுள்ள இடைகால் வடக்குத் தெருவைச் சோ்ந்த பெத்துராஜ் மகன் மகாராஜன் (30) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக மகாராஜனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்தனா். மாவட்ட எஸ்.பி. என். சிலம்பரசன் பரிந்துரையின்பேரில், மகாராஜனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மகாராஜனை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் காவல் ஆய்வாளா் சண்முகவேல் கைது செய்து சிறையில் அடைத்தாா்.

முதலீடுகள் எல்லாம் சாதாரணமாக கிடைத்துவிடாது! - முதல்வர் ஸ்டாலின்

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

SCROLL FOR NEXT