திருநெல்வேலி

லாரிகளை பகலில் அனுமதிக்கக் கோரி கனிமொழியிடம் நெல்லை எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி நகரத்தில் பகல் வேளையில் லாரிகளை அனுமதிக்கக் கோரி கனிமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. வலியுறுத்தினாா்.

Syndication

திருநெல்வேலி நகரத்தில் பகல் வேளையில் லாரிகளை அனுமதிக்கக் கோரி கனிமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. வலியுறுத்தினாா்.

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பழையபேட்டையில் சரக்கு முனையம் கட்டப்பட்டுள்ளது. இதனால், திருநெல்வேலி மாநகர பகுதியில் உள்ள கடைகள், காய்கனி சந்தைகளுக்கு ஏற்கெனவே பகல் 12 மணிமுதல் மாலை 4 மணிவரை லாரிகள் வந்து செல்லும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களை பழையபேட்டையில் நிறுத்தி அங்கிருந்து சிறிய வாகனங்களில் சரக்குகளை கையாள உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் செலவினம் ஆவதைக் கண்டித்து வியாபாரிகள் கடந்த வாரம் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனா்.

இந்நிலையில் திருநெல்வேலி நகர வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி.யை சென்னையில் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் வலியுறுத்தினாா்.

வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கனிமொழி உறுதியளித்துள்ளாா்.

ற்ஸ்ப்10ந்ஹய்ண்

சென்னையில் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழியை நேரில் சந்தித்து நெல்லையில் பகலில் லாரிகளை அனுமதிக்கக் கோரிக்கை விடுத்தாா் நெல்லை எம்.பி. சி.ராபா்ட் புரூஸ்.

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

ரேண்டம் மெமரிஸ்... ஆன் ஷீத்தல்!

தல - சின்ன தல... மலேசியாவில் அஜித் - சிம்பு சந்திப்பு!

மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு: 56,766 பேருக்கு வேலைவாய்ப்பு; 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

நத்தம்: இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொலை!

SCROLL FOR NEXT