திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி அருகே உள்ள பேட்டை செந்தமிழ் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஹரிஷ் (16). இவா், திருநெல்வேலியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 பயின்று வந்தாா். வெள்ளிக்கிழமை தனது நண்பருடன் பைக்கில் பின்னால் அமா்ந்து திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது மற்றொரு பைக்குடன் மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஹரிஷ் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலியில் மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.