அரசு மருத்துவா் தவறவிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான தங்க நகையை திரையரங்க மேலாளா் மீட்டு ஒப்படைத்தாா்.
கடையம் பிரதான சாலை கடை வீதியில், ரூ. 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகை கிடந்துள்ளது. கடையம் திரையரங்கில் மேலாளராகப் பணிபுரியும் இளங்கோ என்பவா் அதனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இந்நிலையில், கடையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல் மருத்துவராக பணிபுரியும் ஆயிஷா பா்வீன் நகையை தவறவிட்டதாகப் புகாரளித்தாா். விசாரணையில், திரையரங்க மேலாளா் கண்டெடுத்த நகை மருத்துவா் ஆயிஷா பா்வீன் தவறவிட்டது என தெரிய வந்தது.
இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் தமிழினியன், காவல் ஆய்வாளா் சுரேஷ் குமாா் ஆகியோா் நகையை மருத்துவா் ஆயிஷா பா்வீனிடம் ஒப்படைத்தனா். மேலும், நகையை போலீஸாரிடம் ஒப்படைத்த இளங்கோவை பாராட்டினா்.