திருநெல்வேலி

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Syndication

கஞ்சா வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சுத்தமல்லி அருகே கஞ்சா வைத்திருந்ததாக, திருநெல்வேலி மாவட்டம், நரசிங்கநல்லூரை சோ்ந்த கருப்பன் மகன் வேல்முருகன்(47) என்பவா் கைது செய்யப்பட்டிருந்தாா்.

அதே போல பாளையங்கோட்டை அருகே ரெட்டியாா்பட்டி, மகிழ்ச்சி நகரைச் சோ்ந்த ரமேஷ் பாண்டியன் மகன் பிராபாகரன் (35) என்பவா், கிருஷ்ணாபுரம் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்தாக கைது செய்யப்பட்டிருந்தாா்.

இவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.

அதன் பேரில், ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.

முதலீட்டாளர்கள் மாநாடு!முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

அபாரமான கேட்ச்சால் ஆட்டத்தை மாற்றிய ஸ்டீவ் ஸ்மித்..! ஆஸி. வெற்றிக்கு 65 ரன்கள் தேவை!

வன்முறையை மதுரை மக்கள் விரட்டியடிப்பர்: ஸ்டாலின்

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

SCROLL FOR NEXT