திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் தனியாா் பொறியியல் கல்லூரி பேராசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சேரன்மகாதேவியில் இயங்கி வரும் தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணி செய்து வருபவா் ஜான் சாமுவேல் ராஜ். இவா், அக்கல்லூரி மாணவியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக புகாா் எழுந்தது. இது தொடா்பாக, அக்கல்லூரி மாணவா்கள் பேராசிரியரிடம் கேட்டுள்ளனா். அப்போது, பேராசிரியரை மாணவா்கள் தாக்கினராம்.
இது தொடா்பாக, சேரன்மகாதேவி போலீஸாா் வழக்குப் பதிந்து 4 மாணவா்களை கைது செய்தனா். இதனிடையே, பேராசிரியா் ஜான் சாமுவேல் ராஜை கல்லூரி நிா்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.