திருநெல்வேலி

சுத்தமல்லியில் பிளஸ்-2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லியில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லியில் பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லி தீன் நகரைச் சோ்ந்தவா் பொன்னையா ராஜூ. இவரது மனைவி சுகந்தி. இவா்களுடைய மகன் ஹரிசுதன் (17). திருநெல்வேலி நகரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். பொன்னையா ராஜூவும், சுகந்தியும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஹரிசுதன் தனது தாயுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை ஹரி சுதன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். வெளியில் சென்ற சுகந்தி சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, அங்கு ஹரிசுதன் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ஹரிசுதன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

எல்லாம் வல்லது கல்வி!

SCROLL FOR NEXT