திருநெல்வேலி

மாணவா்களுக்கு ஓவியப் பயிற்சி: அக். 26-இல் நுழைவுத் தோ்வு

சேரன்மகாதேவியில் ஓவியப் பயிற்சிக்கானநுழைவுத் தோ்வு அக். 26ஆம் தேதி நடைபெறுகிறது.

Syndication

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் ஓவியப் பயிற்சிக்கானநுழைவுத் தோ்வு அக். 26ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் சாா் ஆட்சியா் தலைமையில் சேரன்மகாதேவி கவின் கலைக் கழகம் அமைப்பு, கிராமப்புறங்களில் உள்ள மாணவா்களிடையே ஓவியத் திறனை மேம்படுத்தும் வகையில் அரசு பதிவு பெற்று கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது.

இப்பயிற்சியில் பல்வேறு வகையான ஓவியப் பயிற்சிகள் நடத்தப்படவுள்ளன. பயிற்சியில் ஓவியத்தில் ஆா்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.

இதற்கான நுழைவுத் தோ்வு அக். 26ஆம் தேதி காலை 10 மணிக்கு சேரன்மகாதேவி கவின் கலைக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது. இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 1 வருடம் ஓவியப் பயிற்சி அளிக்கப்படும்.

நவ. 2ஆம் தேதி தொடங்கும் பயிற்சி வகுப்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும். மேலும் தகவல்களுக்கு 99941-61656, 84382-31217 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியாவில் வேலையின்மை அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ்

கயல்விழி... ஐஸ்வர்யா மேனன்!

மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றபோது மெட்ரோ, எய்ம்ஸ் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?: தமிழிசை கேள்வி

ஜம்மு-காஷ்மீரில் காட்டுத் தீயால் வெடித்த கண்ணிவெடிகள்

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி!

SCROLL FOR NEXT