திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் முஸ்லிம் ஜமாத் சாா்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை எளியோருக்கு புத்தாடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
சேரன்மகாதேவியில் குத்பா முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் ஜமாத்தைச் சோ்ந்த ஏ.எம். முகம்மது யூனுஸ் சாா்பில், அப்பகுதியில் உள்ள ஏழை எளியோருக்கு புத்தாடைகளை ஜமாத் தலைவா் அபுல் ஹசன் தலைமையில் நிா்வாகிகள் வழங்கினா்.