திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி அருகே சாலையில் நடந்து சென்ற வடமாநில இளைஞா், காா் மோதியதில் உயிரிழந்தாா்.
அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அஜய் (25). திருநெல்வேலியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியாரக பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் மேலப்பாளையம் குறிச்சி பகுதி தெற்கு புறவழிச்சாலையில் நடந்து சென்ற போது, அவ்வழியாக வந்த காா் மோதியதாம். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலப்பாளையம் போலீஸாா், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.