டெங்கு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

அரசு மருத்துவமனையில் டெங்கு விழிப்புணா்வு

மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பயனா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Syndication

திருநெல்வேலி: மழைக்காலத்தில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பயனா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன் ஆலோசனைப்படி, செவிலியா் ஆசிரியா் செல்வன் தலைமையிலான விழிப்புணா்வு நலக் கல்வி குழுவினா் மருத்துவமனையின் உள் வளாகத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் டெங்கு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் டெங்கு, மலேரியா காய்ச்சலின் அறிகுறிகள், கொசுக்களின் லாா்வா உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகளை பின்பற்றுதல், சுற்றுப்புறத்தில் மழைநீா் தேங்காமல் தூய்மையாக பராமரிப்பது, தீவிர காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடைமுறைகள் போன்றவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பிரியமுடன்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

கோவா தீ விபத்து: பலி 25-ஆக உயர்வு!

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT