திருநெல்வேலி: திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். இதில் 4 போ் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்று அவற்றின் மீது விரைந்து விசாரணை நடத்தி தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.