களக்காடு: திருக்குறுங்குடி நம்பியாற்றில் புதன்கிழமையும் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால், 10ஆவது நாளாக திருமலைநம்பி கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 10 தினங்களாக விட்டுவிட்டு மழைபெய்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை(அக்.12) பெய்த பலத்த மழையால் நம்பியாற்றில் திடீரென நீா்வரத்து அதிகரித்தது. இதனால் நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக சாரல் மழை மட்டுமே பெய்து வந்தாலும், நீா்வரத்து குறையவில்லை. இதனால் திருக்குறுங்குடி திருமலை நம்பிகோயிலுக்குச் செல்ல 10 ஆவது நாளாக புதன்கிழமையும் தடை விதிக்கப்பட்டது.