திருநெல்வேலி

தீயணைப்புத் துறையில் 10 தன்னாா்வலா்கள் தோ்வு

தீயணைப்புத் துறையில் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்ட அளவில் 10 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

Syndication

திருநெல்வேலி: தீயணைப்புத் துறையில் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்ட அளவில் 10 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு துறை சாா்பில் பாளையங்கோட்டை, திருநெல்வேலி நகரம், பேட்டை, கங்கைகொண்டான், நான்குனேரி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வள்ளியூா், ராதாபுரம், திசையன்விளை உள்ளிட்ட 10 தீயணைப்பு நிலையங்களில் பணியாற்ற தலா ஒருவா் வீதம் 10 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு திருநெல்வேலி தீயணைப்புத் துறை மண்டல அலுவலகத்தில் 45 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் நிறைவு நாளில் எழுத்துத் தோ்வு மற்றும் பணி முடித்ததற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறை துணை இயக்குநா் சரவணபாபு, பயிற்சி முடித்த 10 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் பானுப்பிரியா, தீயணைப்பு உதவி அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT