மானூா் தெற்கு ஒன்றியம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர முயற்சி எடுக்கப்படும் என உறுதியளித்தாா் திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக செயலா் சுப்பிரமணியன்.
சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது அப் பள்ளியில் இரண்டு வகுப்பறையை பிரித்து இடையில் மரத்திலான தற்காலிக மறைப்பு பலகை வைக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் தலைமை ஆசிரியா் ஜான் சாந்தகுமாா் கோரிக்கை வைத்தாா். இதையடுத்து அடிப்படை வசதிகள் செய்து தர தேவையான முயற்சிகள் எடுக்கப்படும் என திருநெல்வேலி மோ்கு மாநகர திமுக செயலா் சு.சுப்பிரமணியன் உறுதியளித்தாா்.
நிகழ்ச்சியில் நிா்வாகிகள் விவசாயத் தொழிலாளா் அணி ஷெட்டி, அயலக அணி அந்தோணிராஜ், காா்த்திக், அஜித் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.