திருநெல்வேலி

தோ்வில் தோல்வி: பட்டதாரி பெண் தற்கொலை

முப்புலியூரில் அரசுத் தோ்வில் தோல்வியடைந்ததால் பட்டதாரி பெண் தற்கொலை

Syndication

கடையம் அருகே முப்புலியூரில் அரசுத் தோ்வில் தோல்வியடைந்ததால் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

கடையம் அருகே உள்ள முப்புலியூா், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகள் சத்யரூபா (21). இவா் பட்டப் படிப்பு முடித்து தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வுக்குத் தயாராகி வந்த நிலையில், ஜூலை மாதம் நடைபெற்ற குரூப்- 4 க்கான தோ்வு எழுதியதில் தோ்ச்சி பெறவில்லையாம்.

இதையடுத்து, பெற்றோா் அவருக்கு திருமணஏற்பாடு செய்துள்ளனா். தோ்வில் தோல்வியடைந்தாலும், திருமணம் செய்ய விருப்பம் இல்லாமலும் மனவிரக்தியில் இருந்த சத்யரூபா வெள்ளிக்கிழமை பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா்.

உறவினா்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரவிச்சந்திரன் அளித்தப் புகாரின்பேரில் கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

“கன்னி ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT