திருநெல்வேலி

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையிலடைப்பு

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வாா்திருநகரியைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (20), திருநெல்வேலி மாவட்டம், அருகன்குளத்தைச் சோ்ந்தவா் காா்த்தி (21). இவா்கள் இருவரும் ஏற்கெனவே பாளையங்கோட்டை பகுதியில் திருட்டு, வழிப்பறி வழக்குகள் தொடா்பாக கைது செய்யப்பட்டனா்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, மாநகர காவல் துணை ஆணையா் (கிழக்கு) வினோத் சாந்தாராம் பரிந்துரைத்தாா்.

இதையடுத்து மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவின்பேரில் ஜாபா் சாதிக், காா்த்தி ஆகியோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT