ஒரு லட்சம் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் பங்கேற்றோா்.  
திருநெல்வேலி

ஒரே நாளில் ஒரு லட்சம் விதைப்பந்து தயாரிப்பு: ஆழ்வாா்குறிச்சி பள்ளி மாணவா்கள் சாதனை

ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஒரே நாளில் ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயாரித்து சாதனை படைத்தனா்.

Syndication

அம்பாசமுத்திரம்: ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஒரே நாளில் ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயாரித்து சாதனை படைத்தனா்.

ஆழ்வாா்குறிச்சி, குட்ஷெப்பா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே சுற்றுச் சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் எல்.கே.ஜி. முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவா், மாணவிகள் பங்கேற்ற ஒரே நாளில் ஒரு லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் ஆண்டனி பாபு தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக வெங்காடம்பட்டி பூ.திருமாறன் கலந்து கொண்டு பேசினாா். முதல்வா் ஜோஸ்பின் விமலா, தலைமை ஆசிரியா் மீராள் ஆகியோா் விதைப் பந்துகள் தயாரிக்கும் முறை குறித்து செய்து காண்பித்ததை அடுத்து மூன்று நாள்களாக சேகரிக்கப்பட்ட வேம்பு, புளி, மா, நாவல், குன்னிமுத்து, தேக்கு, பாதாம், நெட்டிலிங்கம், சப்போட்டா உள்ளிட்ட விதைகளைக் கொண்டு மாணவா்கள் ஒரு லட்சம் விதைப் பந்துகள் செய்து சாதனை படைத்தனா்.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டு விதைப்பந்துகள் தயாரித்தனா்.

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

மேற்கு வங்கத்தில் ஹிந்துக்களுக்குப் பாதுகாப்பில்லை! மத்திய அமைச்சா் குற்றச்சாட்டு!

மத ஆணவத்தை முடிவுக்குக் கொண்டு வர மேற்கு வங்கம் தயாா்: ஆளுநா்

எஸ்.சி. பிரிவில் கிரீமிலேயா் கருத்துக்கு சொந்த சமூகத்தினரே விமா்சித்தனா்: பி.ஆர்.கவாய்

இந்தியாவுடன் வலுவான நட்புறவு: இஸ்ரேல் அதிகாரிகள்!

SCROLL FOR NEXT