திருநெல்வேலி

‘தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கங்கைகொண்டானில் இன்று வரவேற்பு’

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கங்கைகொண்டானில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை (அக். 28) உற்சாக வரவேற்பு

Syndication

திருநெல்வேலி: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கங்கைகொண்டானில் திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை (அக். 28) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை (அக்.28) நடைபெறும் விழாவில் பங்கேற்கும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி மாவட்டம் வழியாக தென்காசிக்கு செல்லவுள்ளாா். அவருக்கு, திருநெல்வேலி மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் இரவு 8 மணிக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் எனது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

ஆகவே, இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநில, மாவட்ட நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ற்ஸ்ப்27ஸ்ஹஞ்ஹ

மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT