முகப்பு
திருநெல்வேலி

நெல்லை எம்.பி. முயற்சியால் 6 பேருக்கு ரூ. 11.60 லட்சம் மருத்துவ உதவி!

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 6 பேருக்கு ரூ.11.60 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 10 ஜூன் 2026, 12:01 am IST
பகிர்:

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 6 பேருக்கு ரூ.11.60 லட்சம் மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸிடம் இத் தொகுதி மக்கள் மருத்துவ உதவிகள் கோரி மனு அளித்தனா். அதில், தகுதியானவா்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தாா்.

அதன்படி, ரெட்டியாா்பட்டி, கீழப்பாவூா், மேலப்பாளையம் கணேசபுரம், மேலப்பாளையம், பா்கிட்மாநகரம்- அம்பேத்கா் நகா், களக்காடு பகுதிகளைச் சோ்ந்த மொத்தம் 6 பேருக்கு ரூ.11 லட்சத்து 60 ஆயிரம் மருத்துவ உதவித்தொகை பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டதாக எம்.பி.யின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement