முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது

Updated On : 25 மே 2026, 2:27 am IST
கைது... - கோப்புப் படம்
பகிர்:

திருநெல்வேலியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மகாராஜநகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவா்கள் விற்பனைக்காக சுமாா் 90 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த யோகேஷ் (21), ராஜ்குமாா் (19), 17 வயது சிறுவன் ஆகிய மூவரை சனிக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement