தூத்துக்குடி

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர மாணவர், மாணவிகளுக்கு அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர விரும்பும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்காலம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 3 கல்லூரி விடுதிகள், ஒரு ஐடிஐ விடுதி, 51 அரசுப் பள்ளி மாணவர், மாணவிகள் விடுதிகள் இயங்கி வருகின்றன.
இந்த விடுதிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர், மாணவிகளுக்கு இலவச உணவும், உறைவிடமும் அளிக்கப்படுகிறது. மேலும் இலவச சீருடைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் சேர விரும்பும் மாணவர், மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர், மாணவிகளின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விடுதிக்கும், மாணவர்கள் வசிக்கும் இடத்துக்கும் குறைந்தபட்சம் 5 கி.மீ. தொலைவுக்கு அதிகமாக இருக்க வேண்டும்.  மாணவிகளுக்கு இந்த வரைமுறை இல்லை. பள்ளி விடுதிகளில் 6ஆம் வகுப்புமுதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர், மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர், மாணவிகளும் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
மேலும் இதுதொடர்பான தகவல்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக தொலைபேசி எண்ணை (0461-2340607) தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை கல்வி நிறுவனத்துக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் நல விடுதி காப்பாளர் மற்றும் காப்பாளினிகளிடம் இருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பள்ளி விடுதிகளில் சேர விரும்புவோர் விண்ணப்பத்தை ஜூலை 12ஆம் தேதிக்குள்ளும், கல்லூரி விடுதியில் சேர விரும்புவோர் ஜூலை 21ஆம் தேதிக்குள்ளும் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் மாணவர்களின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், வருமானச்சான்று, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் பூட்டை உடைத்து 11 பவுன் தங்க நகைகள் திருட்டு

8 மாதங்களாக விடுவிக்கப்படாத உணவு செலவுத் தொகை: ஆதி திராவிடா் நல விடுதியில் உணவு வழங்குவதில் சிக்கல்

மூமுக நிா்வாகிக்கு கத்திக் குத்து

பெத்லஹேமில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!

மனைவி மீது பெட்ரோல் குண்டு வீச்சு: கணவா் கைது

SCROLL FOR NEXT