தூத்துக்குடி

திசையன்விளை அருகே விவசாயி அடித்துக் கொலை; டிரைவர் கைது

திசையன்விளை அருகே தெற்கு ஏறாந்தையில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

DIN

திசையன்விளை அருகே தெற்கு ஏறாந்தையில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள ஏறாந்தையைச் சேர்ந்த குட்டிக்கண் மகன் துரைப்பாண்டி (65). விவசாயியான இவர் தனது மனைவி சேர்மக்கனியுடன் (63) உள்ளுரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவரும் வெளியூரில் வசித்து வருகின்றனர். துரைப்பாண்டிக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.
தோட்டத்துக்குச் செல்லும் வழியில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் மகனான டிரைவர் தேவபாலனுக்கு நிலம் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே நிலத் தகராறு ஏற்பட்டதாம். இந்நிலையில்  இரவு 11 மணிக்கு துரைப்பாண்டி தோட்டத்துக்குச் சென்றாராம். அப்போது பின்தொடர்ந்து சென்ற தேவபாலன் அவரை  கடப்பாரையால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த துரைப்பாண்டி அதே இடத்தில் இறந்தார்.
இதையடுத்து அங்கிருந்து தேவபாலன் தப்பிச் சென்றபோது ரோந்து சென்ற காவல் துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது துரைப்பாண்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தேவபாலன் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து திசையன்விளை காவல்துறை ஆய்வாளர் ஜெயராஜ் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவா : இரவு விடுதியில் பயங்கர தீவிபத்து! 23 பேர் பலி!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் முயற்சி முறியடிப்பு

ஃபேன் அல்ல ஏசி... கார்த்தி உடனான அனுபவம் பகிர்ந்த கீர்த்தி ஷெட்டி!

நீலக் குயில்... திவ்யபாரதி!

மீண்டும் ஆரம்பம்! சென்னைக்கு அடுத்த சுற்று மழை எப்போது? டிசம்பர் எப்படி இருக்கும்!

SCROLL FOR NEXT