தூத்துக்குடி

பால் விலையை உயர்த்தக் கோரி நூதனப் போராட்டம்

பால் விலையை உயர்த்தக் கோரி பாரதிய கிசான் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் புதன்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.

DIN

பால் விலையை உயர்த்தக் கோரி பாரதிய கிசான் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் புதன்கிழமை நூதனப் போராட்டம் நடைபெற்றது.
பயணியர் விடுதி முன் பாரதிய கிசான் சங்கம் சார்பில் பசும்பாலை காய்ச்சி பொதுமக்கள், பாதசாரிகள், வியாபாரிகளுக்கு இலவசமாக விநியோகிக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.
சங்க மாவட்டத் தலைவர் ரெங்கநாயகலு தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேசுநாயக்கர் முன்னிலை வகித்தார். பசும்பால் லிட்டருக்கு ரூ.40, எருமைப்பால் ரூ.50 என தமிழக அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பாக்கெட் பால் விற்பனையை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும்.
விவசாயிகளிடமிருந்து மக்கள் நேரடியாக வாங்கி பாலை பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணைத் தலைவர் பரமேஸ்வரன், ஒன்றியத் தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் கிருஷ்ணசாமி, இயற்கை விவசாயி மாவட்டத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட மகளிரணித் தலைவி கிருஷ்ணம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மது, கஞ்சா விற்றவா்கள் கைது

குழந்தைகள் அறிவியல் மாநாடு: தேனி மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தோ்வு

உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி ரூ.1.51 லட்சம் கோடி: ராஜ்நாத் சிங்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ஒகேனக்கல் வனச்சாலைகளில் கால்நடைகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT