சாத்தான்குளம் வட்டம் புத்தன்தருவையில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தலைமை வகித்தார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் கணேஷ்குமார் வரவேற்றார்.
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர், 93 பயனாளிகளுக்கு ரூ.6.20 லட்சம் நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
முன்னதாக பெறப்பட்ட 274 மனுக்களில் 141 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பதிலளிக்கப்பட்டது.
முகாமில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் செல்வராஜ், மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயசூரியா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர் ஆகியோர் பேசினர். முன்னதாக முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வு கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார்.
முகாமில், சமுக பாதுகாப்புத் துறை தனித் துணை ஆட்சியர் காமராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் டி.நவாஸ்கான், தாட்கோ துணை மேலாளர் யுவராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முத்து எழில், ஒன்றிய ஆணையர் ஜ.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வட்டாட்சியர் ராஜீவ்தாகூர்ஜேக்கப் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.