தூத்துக்குடி

ஆறுமுகனேரி ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி வாலவிளை வடக்கு தெரு ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.

DIN

ஆறுமுகனேரி வாலவிளை வடக்கு தெரு ஸ்ரீதேவி முத்தாரம்மன் கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றது.
இக்கோயில் கொடைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கி வருஷாபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் திருவிளக்கு பூஜையும், நள்ளிரவு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.
திங்கள்கிழமை உச்சிகால பூஜைக்கு பின்னர், அம்மன் மஞ்சள் நீராடி கடலுக்கு சென்று புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது. நள்ளிரவு அம்மனுக்கு அலங்கார பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை உச்சிகால பூஜைக்குப் பின்னர் அம்மன் ஆத்தூர் தாமிரவருணி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, புனித தீர்த்தம் கொண்டு வருதல் நடைபெற்றது. நள்ளிரவில் அம்மன் சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னர் கும்பம் வீதியுலா நடைபெற்றது. புதன்கிழமை படப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. மாலையில் சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டி, மகளிருக்கு கோலப்போட்டி மற்றும் சிறுவர், சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தாணே: போலி பாஸில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த இளைஞர் கைது

பூவே உனக்காக... மோனிஷா மோகன்!

சென்னை: ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் தீவிபத்து! முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!

வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்!

அடுத்த படத்தின் படப்பிடிப்பை முடித்த மஞ்ஞுமெல் பாய்ஸ் இயக்குநர்!

SCROLL FOR NEXT