தூத்துக்குடி

குரூப் 2 தேர்வு: தூத்துக்குடி மாவட்டத்தில் 4 இடங்களில் இலவச பயிற்சி வகுப்பு

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு இடங்களில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

DIN

குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு இடங்களில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பல்வேறு துறைகளில் உள்ள 1953 காலிப் பணியிடங்களுக்கு குரூப்-2 ஏ எழுத்துத் தேர்வு ஆக. 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 26ஆம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் ரூ.150.  ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்கு உண்டு. பொதுப்பிரிவினர் தவிர ஏனைய பிரிவினர் அனைவருக்கும் வயது வரம்பு கிடையாது. பொதுப்பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு 30ஆகும். மேலும் பிற விவரங்களை w‌w‌w.‌t‌n‌p‌sc.‌g‌o‌v.‌i‌n​ என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்புத் துறையின் மூலமாக திருச்செந்தூர், கோவில்பட்டி மற்றும்  ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளிலும், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளன.  இலவச பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் e‌m‌p‌l‌o‌y‌t‌u‌t​@‌g‌m​a‌i‌l.c‌o‌m என்ற மின்னஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் சநாதனம்: சேகர்பாபு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறிய எதிர்பாராத போட்டியாளர்!

கோவா தீவிபத்தில் 23 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு!

பராமரிப்புப் பணி: கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை செல்லும் ரயில்கள் ரத்து!

சென்னை திரும்புவோருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

SCROLL FOR NEXT