தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஜமாபந்தி தொடக்கம்

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. இம்மாதம் 31ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும்.

DIN

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி புதன்கிழமை தொடங்கியது. இம்மாதம் 31ஆம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும்.
கோவில்பட்டி வட்டம், 1426ஆம் பசலி ஆண்டுக்கான ஜமாபந்தி புதன்கிழமை தொடங்கியது. ஜமாபந்தி அலுவலரும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளருமான (பொது) ராஜையா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
புதன்கிழமை, கழுகுமலை உள்வட்டத்தைச் சேர்ந்த கே.வெங்கடேஸ்வரபுரம், கழுகுமலை, தெற்கு கழுகுமலை, கத்தாலம்பட்டி, கரடிகுளம், கே.சுப்பிரமணியபுரம், காளாங்கரைப்பட்டி, எஸ்.குமரெட்டையாபுரம், காளாம்பட்டி, கட்டாரங்குளம் ஆகிய கிராம பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 55 மனுக்கள் பெறப்பட்டன.
நிகழ்ச்சியில், நலிந்தோர் நலத் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.10ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ராஜ்குமார், துணை வட்டாட்சியர்கள் மாடசாமி, நாகராஜன், சுப்புலட்சுமி, வேலம்மாள், வருவாய் ஆய்வாளர் கோவிந்தராஜ், உதவியாளர் சுபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT