தூத்துக்குடி

திருச்செந்தூர் கோயிலில் மழை வேண்டி வருண ஜெபம்

மழை வேண்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை வருண ஜெபம் நடைபெற்றது.

DIN

மழை வேண்டி, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை வருண ஜெபம் நடைபெற்றது.
இதையொட்டி வள்ளி, தெய்வானை சன்னதிகளுக்கு இடையே உள்ள யாகசாலை மண்டபத்தில், காலை 7 மணிக்கு சிவசாமி சாஸ்திரிகள் தலைமையில் ஜெபம் நடைபெற்றது. அனுக்ஞை பூஜை, புண்யாக வாசனம், வருண கும்பம் ஆவாகனம் செய்யப்பட்டதும், பரிஜார்த்திய சுத்த ஜெபம், காசி விஸ்வநாதர் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பூஜை செய்யப்பட்ட வருண கும்பம், மேளதாளங்கள் முழங்க கடலுக்கு எடுத்துவரப்பட்டு கடலில் புனித நீர் ஊற்றப்பட்டது.
நிகழ்ச்சியில், கோயில் உள்துறை கண்காணிப்பாளர் பத்மநாபபிள்ளை, மேலாளர் அய்யாபிள்ளை, சந்தனம் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோயில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT