தூத்துக்குடி

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1 ஆவது அலகில் (யூனிட்) புதன்கிழமை பிற்பகலில் கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

DIN

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1 ஆவது அலகில் (யூனிட்) புதன்கிழமை பிற்பகலில் கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
 தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் ஏறத்தாழ 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இருப்பினும்,அடிக்கடி ஏற்படும் பழுதுகளால் மின் உற்பத்தி முழு அளவை எட்டாத நிலை நீடித்து வருகிறது.
 இந்நிலையில், 1 ஆவது அலகில் உள்ள கொதிகலனில் புதன்கிழமை பிற்பகலில் திடீரென ஏற்பட்ட பழுது காரணமாக அந்த அலகின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,புதன்கிழமை இரவு நிலவரப்படி ஏறத்தாழ 800 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT