தூத்துக்குடி

கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் முற்றுகை

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டியும், மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்தும்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்

DIN

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வழங்க வேண்டியும், மத்திய,  மாநில அரசுகளைக் கண்டித்தும்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் ஆதித்தமிழர் பேரவையினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு மாவட்டச் செயலர் நம்பிராஜ்பாண்டியன் தலைமை வகித்தார்.  மாவட்டத் தலைவர் முத்துகுமார், துணைச் செயலர் தமிழ்ச்செல்வன்,  நிதிச் செயலர் உதயசூரியன்,  மாநில அமைப்புச் செயலர் அருந்ததி அரசு மற்றும் 3 பெண்கள் உள்பட 21 பேர் தலைமை அஞ்சல் அலுவலகத்துக்குள் நுழைந்து கோஷமிட்டனர்.
பின்னர்,  போலீஸார் மற்றும் அஞ்சல் ஊழியர்கள், அலுவலகத்தின் கதவை பூட்டினர். இதனால் பொதுமக்கள் யாரும் அஞ்சல் அலுவலகத்துக்குள் செல்ல முடியாலும்,  வெளியே வர முடியாமலும் சுமார் 45 நிமிடம் தவித்தனர். இதையடுத்து, அலுவலகத்தில் முற்றுகையிட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT