நீட் தேர்வை தமிழகத்தில் நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியினர் கோவில்பட்டியில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவி அனிதா மரணத்துக்கு முழு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர தடை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. நகரச் செயலர் தமிழரசு தலைமையில், மாவட்டச் செயலர் தாஸ், துணைச் செயலர் பீமாராவ் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட 14 பேரையும் போலீஸார் கைது செய்தனர். சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.