தூத்துக்குடி

தசரா விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் தசரா விழா செப்.21ஆம் தேதி தொடங்கி அக். 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வர் என்பதால் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. வீரப்பன் தலைமை வகித்தார். சார் ஆட்சியர் தீபக் ஜேக்கப்,  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜையா, திருச்செந்தூர் கோட்டாட்சியர் கணேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் மூ. வீரப்பன் பேசியது: திருவிழாவுக்கு வரும்  பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிதண்ணீர்,  சுகாதாரம்,  மின்சார வசதி,  போக்குவரத்து வசதி ஆகியவற்றை முறையாக வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடல் பாதுகாப்பு வளையத்துடன் தீயணைப்புத் துறையினரும்,  உயிர் மீட்பு படகுடன் மீன்வளத் துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். கோயில் வளாகத்தில் மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வசதியுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறை மூலம் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலை தாற்காலிமாக சீரமைக்கப்படும். பக்தர்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

சூர்யா 47 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

இரவில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

SCROLL FOR NEXT