தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் வரலாற்றுத் துறை பழைய மாணவர்கள் சங்கம் சார்பில், பண்டைய நாணயம் மற்றும் பொருள் கண்காட்சி கல்லூரி கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. அனிதா, கண்காட்சியை தொடங்கிவைத்துப் பார்வையிட்டார். தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் ஏ. குப்புசாமி தனது சேகரிப்பான பழைய நாணயங்கள், பண்டைய கால பொருள்கள் மற்றும் அரிய புகைப்படங்களை கண்காட்சியில் வைத்திருந்தார். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலோகம் மற்றும் தோல் நாணயங்கள், இந்திய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணம், பண்டைய நாகரிகங்களை பறைசாற்றும் படங்கள், தேசியக் கொடியின் வரலாறு காட்டும் புகைப்படங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
நிகழ்ச்சியில், வரலாற்றுத் துறை பழைய மாணவர் சங்கத் தலைவர் செயின்ட் ரவி ராஜன், கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுச் செயலர் விமல்ராஜ், வரலாற்றுத் துறைத் தலைவர் ராஜேஸ்வரி, பேராசிரியர்கள் ஆ. தேவராஜ், பெலிசிட்டா, சுப்பிரமணியன், உடற்கல்வி இயக்குநர் து. பாலசிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கண்காட்சியை தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவிகள் பார்வையிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.