தூத்துக்குடி

தேக்கு மரம் வளர்க்க அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தேக்கு மரங்கள் வளர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என வனவியல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் தேக்கு மரங்கள் வளர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என வனவியல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாவட்ட வனவியல் விரிவாக்க அலுவலகச் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத், மூக்குப்பேரி, அங்கமங்கலம், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, கேம்பலாபாத், தெற்கு காயல்பட்டினம், நாலுமாவடி, படுக்கப்பத்து, மணப்பாடு ஆகிய 10 கிராமங்களை தத்தெடுத்து நீண்ட காலத்தில் பலன் தரக்கூடிய தேக்கு, குமிழ்தேக்கு, ஈட்டி ஆகிய மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்து தரப்படவுள்ளது. மேலும்,  2 ஆண்டுகளுக்குப் பிறகு, உயிர்ச்செடிகளின் அடிப்படையில் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமும்,  ஆர்வமும் உள்ள விவசாயிகள் வனவியல் விரிவாக்க அலுவலகத்தை 0461 - 2340244 என்ற தொலைபேசி எண்ணிலும், 94438 07276, 80727 19025, 90943 54419 ஆகிய செல்லிடப்பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் எனக்  குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

திருப்பரங்குன்றம் சம்பவம்: சேலத்தில் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் டிச.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

சாலை மறியலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினா் 58 போ் கைது

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் நகை திருடிய செவிலியா் கைது

SCROLL FOR NEXT