தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர் அரசுப் பள்ளி மாநில சிலம்பப் போட்டிக்கு தகுதி

திருநெல்வேலி மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், 

DIN

திருநெல்வேலி மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்,  மாணவிகள் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
திருநெல்வேலி மண்டல அளவிலான சிலம்பாட்டப் போட்டி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், நாலாட்டின்புத்தூர் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர், மாணவிகள் 43  பேர் பங்கேற்றனர்.  இதில், 10 மாணவர்,  மாணவிகள் முதலிடம் பெற்று, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். 6 பேர் 2ஆவது இடத்தையும்,  9 பேர் 3ஆவது இடமும் பெற்றனர். மண்டல அளவிலான சிலம்பப் போட்டியில் கே.ஆர். சாரதா அரசு மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.  வெற்றி பெற்ற மாணவர், மாணவிகளையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் கணேசவேல்,  பயிற்றுநர் மாரிக்கண்ணன் ஆகியோரையும் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் பால்சாமி, ரமேஷ்ராஜா,  பள்ளித் தலைமையாசிரியை சண்முகவடிவு உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொல்லியல் துறை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

கோவா இரவு விடுதி விபத்து எதிரொலி: பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்யும் தில்லி போலீஸ்!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்!

இலவச கண் மருத்துவ முகாம்: 200 பேருக்கு சிகிச்சை

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெண்கல முருகா் சிலை கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT