கடம்பூர் அருகே வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண் கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கடம்பூரையடுத்த கள்ளத்தி கிணறு தெற்கு காலனியைச் சேர்ந்தவர் ஜஸ்டின் திரவியம். இவரது மகள் பெல்சியா(23). கடந்த 2ஆம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் கட்டடத் தொழிலாளி நடராஜன், முரம்பன் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் வீட்டுக்குள் நுழைந்து, பெல்சியா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தனராம்.
பெல்சியாவின் அலறல் சப்தத்தைக் கேட்ட அவரது பெற்றோர் எழுந்து பார்த்த போது, இருவரும் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி விட்டனராம். இதுகுறித்து கடம்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.