தூத்துக்குடி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் நிறைவு

திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  மூன்று நாள்களாக மேற்கொண்டு வந்த  உண்ணாவிரதம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

DIN

திருச்செந்தூரில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  மூன்று நாள்களாக மேற்கொண்டு வந்த  உண்ணாவிரதம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.
 தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர்,  திருச்செந்தூர் காமராசர் சிலை  அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். 3-ஆவது நாளான வியாழக்கிழமை  உண்ணாவிரதப் போராட்டத்தில்,  மாவட்டச்  செயலர் முரசு.தமிழப்பன்,  மாநில கொள்கை பரப்பு அணி துணைச்செயலர் இர.பு.தமிழ்க்குட்டி,  மக்களவை  தொகுதி துணைச்செயலர் மணிகண்டராஜா, உடன்குடி ஒன்றியச் செயலர் தமிழ்வாணன், இளஞ்சிறுத்தை எழுச்சிப்பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் மாரியப்பன் ஆகியோர் ஈடுபட்டனர்.
    இந்நிலையில் புதன்கிழமை மாலையில், உண்ணாவிரத்தில் பங்கேற்ற மாரியப்பனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  தகவலறிந்த, திருச்செந்தூர் வட்டாட்சியர் ரா.அழகர், காவல் ஆய்வாளர் ரகுராஜன்,  கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

சீரடைகிறது இண்டிகோ விமான சேவை முடக்கம்! பயணிகளுக்கு ரூ.610 கோடி திருப்பியளிப்பு!

நிலப்பிரச்னை: விவசாயி தீக்குளித்து தற்கொலை!

கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளா்ச்சி! தமிழக மருத்துவா்கள் ஆய்வு!

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

SCROLL FOR NEXT