தூத்துக்குடி

வில்லிகுடியிருப்பு கோயிலில் கும்பாபிஷேகம்

உடன்குடி வில்லிகுடியிருப்பு அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக  விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.

DIN

உடன்குடி வில்லிகுடியிருப்பு அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக  விழா மூன்று நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை காலையில் மங்கள இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலையில் தீர்த்தங்கள் பவனி வருதல், முதல் கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரண்டாம் மற்றும் மூன்றாம் கால  யாகசாலை பூஜைகள், அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் ஆகியன நடைபெற்றது.
 புதன்கிழமை காலையில் நான்காம் கால யாகசாலை பூஜை, யாத்ரா தானம், கடம் புறப்படுதல்,காலை 6.30 மணிக்கு கோபுர விமான கலசத்துக்கு கும்பாபிஷேகமும், 7 மணிக்கு விநாயகர்,சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபி ஷகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
 ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

மன்னாா்குடி அருகே அரசு, தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 12 போ் காயம்

அறிவறிந்த மக்கட்பேற்றின் மாண்பு!

SCROLL FOR NEXT