அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் உடன்குடியில் புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் ஆர்.தயாளன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ராஜா, மாவட்ட இளைஞரணிச் செயலர் சமத்துவ சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைப் பொதுச்செயலர் என்.சுந்தர், மாநில மாணவரணி துணைச்செயலர் நட்சத்திர வெற்றி ஆகியோர் பேசினர்.
தீர்மானங்கள்: கட்சியில் 25 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, உடன்குடி பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் சிறு தொழிற்சாலைகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பனையேறும் தொழிலாளர்களுக்கு மானியத்தில் கடனுதவி வழங்க வேண்டும்; பனைத் தொழிலாளர்களுக்கு பனையேற நவீன உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட மகளிரணி செயலர் ஜெயந்திகுமார், ஒன்றிய நிர்வாகிகள் ரவி, அழகேசன்ஜான்ராஜா, துரைராஜ், தேவராஜ், பொன்மணி, ஷியாமளா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.