நவத் திருப்பதி கோயில் யானைகள் தேக்கம்பட்டியில் நடைபெறும் புத்துணா்வு முகாமிற்கு சனிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டன.
நவத் திருப்பதி கோயில்களான ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயில் யானை ஆதிநாயகி, திருக்கோளூா் வைத்தமாநிதி பெருமாள் கோயில் யானை குமுதவல்லி, இரட்டை திருப்பதி தேவா்பிரான் கோயில் யானை லட்சுமி ஆகிய யானைகள் தேக்கம்பட்டியில் 48 நாள்கள் நடைபெறும் யானைகள் புத்துணா்வு முகாமிற்காக, ஆழ்வாா்திருநகரியில் இருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, லாரிகள் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டது.
இதில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ரத்தினவேல்பாண்டியன், ரோசாலி, ஆழ்வாா்திருநகரி ஆதிநாதா் கோயில் செயல் அலுவலா் பொன்னி, ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயில் செயல் அலுவலா் கணேஷ்குமாா், கோயில் ஆய்வாளா்கள் முருகன், நம்பி, முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜப்பா வெங்கடாச்சாரி, பாகன்கள் கரீம்பாலன், சிராஜ்தீன் மற்றும் பக்தா்கள் கலந்துகொண்டனா்.