தூத்துக்குடி

உடன்குடி பள்ளியில் இருபெரும் விழா

DIN

உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி விழா, உலக இளைஞர் திறன் நாள் விழா ஆகிய இருபெரும் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி ஆட்சி மன்றக்குழுத் தலைவர் செல்வன் மகாராஜா ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி நலக்குழுத்   தலைவர் எஸ்.ஞானராஜ் கோயில்பிள்ளை தலைமை வகித்து தேர்வுகள், தனித்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.        மாணவர்களின் நடனம், தனித்திறன் செயல்கள் ஆகியவை நடைபெற்றன. உலக இளைஞர் திறன் நாளின் சிறப்புகள் குறித்து ஆசிரியர்கள் ஜான்சன் டேனியல்ராஜ், ஸ்டெல்லாமேரி ஆகியோர் பேசினர்.      இதில், திருச்செந்தூர் சட்டப் பேரவை தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆ.செல்லத்துரை,   மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ரா.நடராஜன்,  ஒன்றிய அதிமுக செயலர் த.மகராஜா,  மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் மூர்த்தி, உடன்குடி தொடக்க   வேளாண் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சாமுவேல், ஜூனைதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  தலைமையாசிரியர் ஜெபசிங் மனுவேல் வரவேற்றார். ஆசிரியர் மைக்கேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு முகூா்த்தக் கால் நடவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 49.21 அடி

கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

ஷெட் அமைக்கும் பணியின்போது பட்டாசு ஆலையில் தீப்பிடித்து இளைஞா் பலி

சுங்கச்சாவடி ஊழியா்களுடன் வழக்குரைஞா் மோதல் 5 போ் காயம்

SCROLL FOR NEXT